#BIGBREAKING: சாதனை பயணத்தை துவங்கிய சந்திரயான்-3.! சரித்திரம் படைத்த இஸ்ரோ.!

இந்தியா உட்பட உலக நாடுகள் எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்த சந்திரயான்-3 விண்கலம் தற்போது விண்ணில் ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான்

Chandrayaan-3 launch

உலக நாடுகள் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் பாய்ந்தது சந்திரயான் – 3.

இந்தியா உட்பட உலக நாடுகள் எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்த சந்திரயான்-3 விண்கலம் தற்போது விண்ணில் ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவு தளத்திலிருந்து, LVM3 M4 ராக்கெட் மூலம் சந்திரயான் – 3 விண்கலம் சரியாக 2:35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. இதற்கான 25 மணி நேரம், 30 நிமிட என்ற ‘கவுன்ட் டவுன்’ நேற்று பிற்பகல் 1 மணிக்கு துவங்கிய நிலையில், தற்போது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்தியவின் கனவு திட்டமான சந்திரயான் – 3 விண்கலத்தில், நிலவில் தரையிறங்கும் ‘லேண்டர், ரோவர்’ போன்ற சாதனங்கள் மட்டும் அனுப்பப்பட்டுள்ளன. 3,900 கிலோ எடை கொண்ட சந்திராயன் – 3 விண்கலத்தில் 7 விதமான ஆய்வு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. விண்ணில் பாய்ந்துள்ள சந்திராயன் 3 நிலவின் தரைப்பரப்பை ஆய்வு செய்யும். நிலவின் தரைப்பரப்பில் மின்னூட்ட அதிர்வுகள், நிலநடுக்க அதிர்வுகள், தட்பவெப்ப நிலை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யும்.

இதில், லேண்டர், ரோவர் உள்ளிட்டவையுடன் சந்திரயான் – 3 நிலவின் தரை பரப்பை ஆய்வு செய்யும். நிலவின் தரை தளத்தை ஆய்வு செய்வதற்கு சந்திரயான் – 3 விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சந்திரயான் – 3 விண்கலத்தில் தொலைத் தொடர்புக்கு தேவையான சென்சார் அமைப்பு, கூடுதலாக ஒரு ஆண்டனாவும் இணைக்கப்பட்டுள்ளது. 749.86 கிலோ எடை கொண்ட லேண்டர் நிலவில் தரையிறங்கிய பின் 14 நாட்கள் செயல்படும். 26 கிலோ எடை கொண்ட ரோவர் வாகனம் நிலவில் தரையிறங்கிய பின் 14 நாட்கள் செய்யப்படும் என்றுள்ளனர்.

unknown node

சந்திரயான் – 3ல் சற்று பெரிதாக 4 இன்ஜின்களுடன் லேண்டர் உருவாக்கப்பட்டுள்ளது. மிக துல்லியமாக, இலகுவாக தரையிறங்கும் வகையில் லேண்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோவர், லேண்டர் மற்றும் உந்துக்கலம் ஆகிய மூன்று அமைப்புகளையும் சேர்த்துதான் சந்திரயான் – 3. இதற்கான திட்ட செலவு 615 கோடி ரூபாயாகும். நிலவில் தரையிறங்க சந்திரயான் – 3 விண்கலம் 10 கட்டங்களாக பயணம் மேற்கொள்கிறது. பூமியில் இருந்து புறப்படும் LVM3 M4 ராக்கெட், 179 கி.மீ., துாரம் உள்ள சுற்றுவட்ட பாதையில், சந்திரயான்-3 விண்கலத்தை நிலை நிறுத்தும்.

unknown node

இதுவே முதல் கட்டமாகும். பின்னர் புவியின் நீள்வட்டப் பாதையில் விண்கலத்தை சுற்ற வைப்பது தான் இரண்டாவது கட்டமாகும். புவியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து 36,500 கி.மீ., துாரம் வரை சந்திரயான்-3 விண்கலம் அனுப்பப்படும். பின், உந்து இயந்திரம், ராக்கெட் போல் செயல்பட்டு, சந்திரயான் – 3 விண்கலத்தை, நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு திருப்பி, நிலவை நோக்கி பயணிக்க வைக்கும்.  10 கட்டங்களும் வெற்றிகரமாக நடந்தால், சந்திரயான் – 3 நிலவில் தரையிறங்க முடியும். எனவே, சந்திரயான் – 3 வெற்றி அடைய 10 கட்டங்களாக பயணிக்க வேண்டும்.

சந்திராயன் 3 விண்கலம் நிலவை அடைய 40 நாட்கள் எடுத்து கொள்ளும் எனவும் கூறப்படுகிறது. இதனால், ஆகஸ்ட் 23 அல்லது 24ம் தேதி, சந்திரயான் – 3 விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் சாதனம் தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த நிகழ்வுக்காகத்தான் இந்தியா மட்டுமின்றி உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது. நிலவுக்கு இந்தியா அனுப்பும் மூன்றாவது விண்கலம் சந்திரயான் – 3 ஆகும். நிலவை ஆய்வு செய்வதற்காக 2008ல் சந்திரயான் – 1, 2019ல் சந்திரயான் – 2 விண்ணில் செலுத்தப்பட்டன.

2008ல் அனுப்பப்பட்ட சந்திரயான் – 1 விண்கலம், நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை கண்டறிந்தது. 2019ல் அனுப்பப்பட்ட சந்திரயான் – 2 விண்கலம், நிலவில் தரையிறங்கும்போது சேதமடைந்து பழுதானது. சந்திரயான் – 2ல் லேண்டர், ரோவர் வேகமாக நிலவில் தரையிறங்கியதால் செயல்பட முடியாமல் போனது.

இந்த நிலையில், இந்திய விஞ்ஞானிகளின் தொடர் முயற்சியால், சந்திரயான் 2வில் நிகழ்ந்த சிறு தவறுகளை சரி செய்து, அதனை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தியாவின் 3வது விண்கலமான சந்திரயான்-3 புதிய தொழில்நுட்பத்துடன் விண்ணில் பாய்ந்தது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் முதல் விண்கலம் என்ற பெருமையை பெறுகிறது சந்திரயான் – 3. இந்த திட்டம் வெற்றி பெற்றால் நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் 4வது நாடு இந்தியா ஆகும். ரஷ்யா. அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் இதுவரை நிலவில் விண்கலத்தை தரையிறக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சாதனை பயணத்தை சந்திராயன்-3 துவங்கி உள்ளது. சரித்திரம் படைத்தது இஸ்ரோ.