பணி நியமன ஊழல் வழக்கு தொடர்பாக பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவிற்கு 2-ஆவது முறையாக சிபிஐ சம்மன்.
சிபிஐ சம்மன்:
பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவிற்கு 2- ஆவது முறையாக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை என்ற ரயில்வே திட்டத்தில் முறைகேடு செய்த வழக்கில் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே, பிப்.4-ஆம் தேதி கார் துணை முதலமைச்சர் தேஜஸ்விக்கு சம்மன் அனுப்பிய நிலையில், இன்று மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஊழல் குற்றசாட்டு:
இதனிடையே, லாலு பிரசாத் மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ், மகள் மிசா பார்தி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது பணி நியமன ஊழல் நடைபெற்றதாக குற்றசாட்டு வைக்கப்பட்டது. இந்த நிலையில், நிலம் தொடர்பான வழக்கில், பீகார் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவருமான தேஜஸ்வி யாதவை, மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணைக்கு வர சம்மன் அனுப்பியுள்ளது.
அமலாக்க இயக்குனரகம் சோதனை:
முன்னதாக, அமலாக்க இயக்குனரகம் (ED) யாதவின் டெல்லி வீடு, பாட்னா, ராஞ்சி மற்றும் மும்பை உள்ளிட்ட 24 இடங்களில் பணமோசடி விசாரணை தொடர்பாக வழக்கில் சோதனை நடந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.