ரிசர்வ் வங்கி ஆளுநருடன் பில்கேட்ஸ் ஆலோசனை..!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் உடன் பில்கேட்ஸ் ஆலோசனை.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் உடன் பில்கேட்ஸ் ஆலோசனை.

மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் உடன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ஆலோசனை நடத்தினார். உலகின் முதல் பணக்காரர் மற்றும் மைக்ரோசாப்ட் தொழிநுட்ப நிறுவனத்தின் இணை இயக்குனர் பில் கேட்ஸ் இன்று மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் உடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.

unknown node
ஆர்பிஐ ஆளுநருடன் பேச்சுவார்த்தை :

அந்த பேச்சுவார்த்தையில்  நிதி உள்ளடக்கம், பணம் செலுத்தும் முறைகள், நுண்நிதி மற்றும் டிஜிட்டல் கடன் வழங்குதல் போன்றவற்றை குறித்து ஆலோசனை நடத்தினார். ஆர்பிஐ தனது ட்வீட்டில் கேட்ஸ் தனது இந்திய பயணத்தின் போது ஆர்பிஐ அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு அவர் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் வணிக வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறார் என்று பதிவிட்டுள்ளது.

unknown node