திரிபுரா சட்டசபையில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்எல்ஏ..! வெளியாகிய வீடியோ..!

திரிபுரா சட்டசபையில் மொபைலில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்எல்ஏ-வின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

திரிபுரா சட்டசபையில் மொபைலில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்எல்ஏ-வின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

திரிபுரா மாநில சட்டசபை கூட்டத்தொடரின் போது பாஜக எம்எல்ஏ ஜாதவ் லால் நாத் தனது மொபைல் போனில் ஆபாச படத்தை பார்க்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநில பட்ஜெட் தொடர்பான விவகாரங்கள் குறித்து சட்டசபையில் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அந்த விவாதத்தில் சபாநாயகரும் மற்ற எம்.எல்.ஏ.க்களும் பேசிக்கொண்டிருக்கும் போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த வீடியோவில் திரிபுராவின் பாஜக எம்எல்ஏ ஜாதவ் லால் நாத் தனது மொபைல் போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அவருக்கு தெரியாமல் பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் அதனை வீடியோ எடுத்துள்ளார்.

unknown node

இது குறித்து பாஜக எம்எல்ஏ ஜாதவ் லால் நாத்திடம் விளக்கம் கேட்டு, அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் பாஜக எம்எல்ஏ இந்த வீடியோவுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை என்றும் கூட்டத்தொடர் முடிந்தவுடன் அவர் சட்டசபை வளாகத்தை விட்டு வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.