கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியை விட்டு வெளியேறிய ஆறு எம்.எல்.ஏக்கள் காங்கிரசில் சேர்ந்தனர்.பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள் இணைப்புக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில், 6 பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ் தொடர்பு கொள்ள முயற்சிக்கும், இதனால், 15 முதல் 20 பாஜக எம்எல்ஏக்கள் குஜராத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் ஜெய்ப்பூரில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் என பாஜக மாநிலத் தலைவர் டாக்டர் சதீஷ் பூனியா தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் சட்டமன்றக் கூட்டத்தொடர் வரை ராஜஸ்தானின் அரசியல் நிலைமை குறித்து விவாதிக்க இந்த கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது.
மேலும், பாஜக எம்எல்ஏக்கள் இன்று முதல் வரும்-14 வரை ஜெய்ப்பூரில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் தங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் வருகின்ற 14-ம் தேதி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…