கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற இடைத்தேர்தல்களின் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தேர்தல் நடைபெற்ற 15 சட்டமன்ற தொகுதியில் ஆளும் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
ஆளும் பாஜக அரசு ஏற்கனவே 106 உறுப்பினர்களை கொண்டு பெரும்பான்மை நிரூபித்திருந்த நிலையில், தற்போது இந்த 15 தொகுதிகளில் 6 தொகுதிகளை கைப்பற்றினால் ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது.
இந்நிலையில் தற்போது காலை 8 மணி முதல் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை ஆனது தற்போது பல தொகுதிகளில் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. அதன்படி பாஜக அரசு தற்போது 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் எடியூரப்பா தலைமையிலான ஆளும் பாஜக அரசு மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. மேலும் ஐந்து தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறது. சுயேச்சை வேட்பாளர் ஒருவர் ஒரு தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிக்கவில்லை.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…