அமிர்தசரஸ் பொற்கோயில் அருகே குண்டுவெடிப்பு… சிறுமிகள் காயம்.!

Amritsar blast

பஞ்சாப், அமிர்தசரஸ் பொற்கோயில் அருகே திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.

பஞ்சாபின் கோல்டன் டெம்பிள் என அழைக்கப்படும் அமிர்தசரஸ் பொற்கோயில் அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. குண்டுவெடிப்பு, சரகர்ஹி சாராய் என்ற குடியிருப்பு பகுதிக்கு முன்னால் உள்ள வாகன நிறுத்துமிடத்திற்கு அருகில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

குண்டுவெடிப்பின் தாக்கத்தால் அருகில் உள்ள உணவகம் மற்றும் சரகர்ஹி சாராய் ஆகியவற்றின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்திருக்கின்றன, இதனால் அருகிலுள்ள பாதசாரிகள் காயமடைந்துள்ளனர். டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின் படி, சம்பவம் நடந்த போது அருகில் ஆட்டோவில் இருந்த சுமார் ஆறு சிறுமிகள் கண்ணாடித் துண்டுகளால் தாக்கப்பட்டுள்ளனர்.

குண்டுவெடிப்புக்கான சரியான காரணத்தை தடயவியல் குழுக்கள் விசாரித்து வருவதாக, கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் டாக்டர் மெஹ்தாப் சிங் தெரிவித்தார். நிலைமை கட்டுக்குள் இருப்பதாக உறுதியளித்த காவல்துறை அதிகாரிகள், மக்கள் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்