RR vs SRH: பேட்டிங்கில் அதிரடி காட்டிய ஆர் ஆர்… ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு..!!

RR batting SRH

ஐபிஎல் தொடரின் இன்றைய RR vs SRH போட்டியில் டாஸ் வென்று முதலில் செய்த ராஜஸ்தான் அணி 214/2 ரன்கள் குவிப்பு.

16-வது ஐபிஎல் தொடரின் இன்று இரு போட்டிகள் நடைபெறும் நிலையில், இரவு 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் இருவரும் அதிரடி பேட்டிங் செய்து இன்னிங்க்ஸை தொடங்கினர். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஜெய்ஸ்வால் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து பேட் செய்ய வந்த சாம்சன், பட்லருடன் ஜோடி சேர்ந்து இருவரும் எதிரணி பந்துவீச்சை நாலாபுறமும் அடித்து நொறுக்கினர்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தனர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட்லர் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முடிவில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது. சாம்சன் 66* ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்