ஜப்பான் பிரதமர் மீது குண்டுவீச்சு; அவரது நல் ஆரோக்கியத்திற்கு பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி ட்வீட்.!

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மீது நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து, வருத்தம் தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மீது நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து, வருத்தம் தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

ஜப்பான் நாட்டில் உள்ள வகாயாமா நகரில் அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida), பொது நிகழ்வில் கலந்து கொண்டபோது, அவர் மக்கள் மத்தியில் தனது பேச்சை தொடங்குவதற்கு முன், அவர் மீது வெடிகுண்டு வீசப்பட்டதாக அந்நாட்டு பத்திரிக்கை தகவல் தெரிவித்தது.

unknown node

ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளருடன், அக்கட்சி தலைவரும், பிரதமருமான ஃபுமியோ கிஷிடா பேசிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பிரதமர் ஃபுமியோ கிஷிடா பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார், மேலும் அவர் காயமின்றி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், பைப் வெடிகுண்டை வீசிய குற்றவாளியை பிரதமரின் பாதுகாப்பு படை அதிகாரிகளால் உடனடியாக கைது செய்யப்பட்டார். பல சமூக ஊடக தளங்களில் இப்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த தகவல் குறித்து அறிந்த பிரதமர் மோடி, தனது ட்வீட்டில் ஜப்பானில் உள்ள வகயாமாவில் எனது நண்பர் பிரதம மந்திரி ஃபுமியோ கிஷிடா கலந்து கொண்ட பொது நிகழ்வில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து அறிந்தேன். அவர் பத்திரமாக இருப்பது நிம்மதி. அவரது தொடர் நல்வாழ்வு மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்கிறேன். அனைத்து வன்முறைச் செயல்களையும் இந்தியா கண்டிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார்.

unknown node