மோசடி கணக்கு என அறிவிக்கும் முன் கடன் வாங்கியவர்களை விசாரிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

வங்கிகள் மோசடி கணக்கு என்று அறிவிக்கும் முன், கடன் பெற்றவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

வங்கிகள் மோசடி கணக்கு என்று அறிவிக்கும் முன், கடன் பெற்றவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

வங்கிகள் தங்கள் கணக்குகளை மோசடி என்று அறிவிப்பதற்கு முன் கடன் பெற்றவர்களிடம் விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஈன்று தீர்ப்பளித்தது. கடந்த 2020-ம் ஆண்டு தெலங்கானா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையின்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இவ்வாறு தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு:

உச்சநீதிமன்ற தீர்ப்பில், ரிசர்வ் வங்கியின் மோசடி வழக்குகள் குறித்த வழிகாட்டுதல்களின்படி, வங்கிகள் ஒரு கணக்கை மோசடி கணக்கு என்று அறிவிக்கும் முன், கடன் பெற்றவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மோசடி அறிவிப்பு கடன் வாங்கியவருக்கு சிவில் மற்றும் கிரிமினல் விளைவுகளை ஏற்படுத்துகிறது எனவும் கூறியுள்ளது. மேலும் மோசடி என அறிவிக்கும்போது முறையான நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ஐபிசி விதிகள்:

மோசடிகளை வகைப்படுத்துவதற்கான மத்திய வங்கியின் சுற்றறிக்கையைப் பின்பற்றும் வங்கிகளுக்கு இது பெரும் பின்னடைவாகும். ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் படி (ஐபிசி) விதிகள், முறைகேடுகள், போலியான பரிவர்த்தனை, ஏமாற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மோசடி என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

விசாரணை நடத்த அவகாசம்:

ரிசர்வ் வங்கியின் முதன்மை சுற்றறிக்கையின் கீழ் கடன் வாங்கியவர்களுக்கு விசாரணை நடத்த வங்கிகள் அவகாசம் வழங்க வேண்டும். கடன் வாங்குபவர் எந்தக் கிரெடிட்டையும் பெறாமல் “தடுப்புப் பட்டியலில்” சேர்ப்பதற்குச் சமம். எனவே, மோசடி மீதான முதன்மை வழிகாட்டுதலின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூறியுள்ளது.

ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை:

2016 ஆம் ஆண்டில், ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது, அதில், வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் கணக்குகளை ஒருதலைப்பட்சமாக மோசடி என்று வகைப்படுத்த வங்கிகளை அனுமதிக்கிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டது. இந்த நிலையில், வங்கிகள் தங்கள் கணக்குகளை மோசடி என்று அறிவிப்பதற்கு முன் கடன் பெற்றவர்களிடம் விசாரிக்க வேண்டும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.