மத்திய பிரதேசத்தின் இந்தூரில் 14 வயது சிறுவனின் முட்டை வண்டியை கடந்த ஜூலை 23-ஆம் தேதி அன்று மாநகராட்சி அதிகாரிகளால் கவிழ்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதில், தனது வண்டியை அகற்றவேண்டும் அல்லது ரூ .100 லஞ்சம் கொடுக்கவேண்டும் என அதிகாரிகள் மிரட்டியதாகவும், பணம் கொடுக்க மறுத்ததால் அதிகாரிகள் வண்டியை கவிழ்த்ததாக அந்த பாதிக்கப்பட்ட சிறுவன் தெரிவித்துள்ளான்.
unknown nodeவண்டி கவிழ்ந்ததால் அனைத்து முட்டைகளும் உடைந்து ரோட்டில் வீணாகியது. சமூக வலைதளங்களில் அந்த சிறுவன் அழுது புலம்பும் வீடீயோவை பகிர்ந்து பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.