மருத்துவமனையில் தலைசீவி, முகச்சவரம் செய்யும் முன்களப்பணியாளர்கள் – நெகிழ்ச்சி சம்பவம்..!

- மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு தலைசீவி, முகச்சவரம் செய்து வரும் முன்களப்பணியாளர்களின் சேவை அனைவரது நெஞ்சையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
கொரோனா தொற்றால் நாடே பெரும் பாதிப்பு அடைந்துள்ளது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் என இவர்களின் அயராத சேவை மற்றும் உழைப்பு நாட்டில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில், ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ முன்களப்பணியாளர்களின் செயல் அனைவரையும் ஆச்சர்யபடுத்தியுள்ளது.
கொரோனா நோயாளிகள் மன அளவில் பெரிதளவு பாதிக்கப்படுகிறார்கள். அவர்களின் நிலையை போக்கும் விதத்தில் பிரஹம்பூரில் இருக்கும் எம்கேசிஜி மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியில் உள்ள மருத்துவ பணியாளர்கள், அங்கிருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவ சேவைகள் செய்வதோடு அவர்களுக்கு அன்போடு தலைசீவி, முகச்சவரம் செய்து வருகின்றனர். இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்து வருகிறது. மேலும், இவர்களின் இந்த சேவைக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025