#Breaking : கர்நாடகாவில் 2 வாரங்கள் முழு ஊரடங்கு…!

கர்நாடகத்தில் நாளை இரவு 9 மணி முதல் மே-10ம் தேதி வரை 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கர்நாடகாவில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதையடுத்து, 2 வாரங்களுக்கு அங்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா அவர்கள் கூறுகையில், ‘கர்நாடகத்தில் நாளை இரவு 9 மணி முதல் மே-10ம் தேதி வரை 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
கர்நாடகாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025