#Breaking:இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 24,602 பேர் டிஸ்சார்ஜ்..!

#Breaking: 24,602 corona victims discharged in one day in India ..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,431 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 318 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,38,94,312 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 22,431 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 4 ஆயிரம் அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,38,94,312 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 318 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,49,856 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 24,602 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,32,00,258 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,44,198 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 92,63,68,608 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 43,09,525 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.