#Breaking:இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 315 பேர் கொரோனாவால் பலி!

#Breaking: 315 killed by corona in last one day in India!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,531 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 315ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,47,93,333 ஆக உள்ளது.மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 578 ஆக உயர்வு.

கடந்த 24 மணி நேரத்தில் 6,531 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 400 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,47,93,333 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 315 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,79,997 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 7,141 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,42,37,495 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவர்களின் எண்ணிக்கை 75,841ஆக உள்ளது.

நாடு முழுவதும் இதுவரை1,41,70,25,654பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 29,93,283 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 578 ஆக உயர்ந்துள்ளது.அதில் 151 பேர் குணமடைந்துள்ளனர்.