#BREAKING: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

terrorist attack

பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் 3 வீரர்கள் இறந்ததை அடுத்து உயிரிழப்பு 5-ஆக உயர்வு.

ஜம்மு – காஷ்மீரின் ரஜோரி பகுதியில், தேடுதல் வேட்டையின்போது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 2 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது.

வெடிகுண்டு தாக்குதலில் படுகாயமடைந்த மேலும் 3 வீரர்கள் இறந்ததை அடுத்து உயிரிழப்பு 5-ஆக உயர்ந்துள்ளது. ரஜோரி மாவட்டத்தின் கன்டி வனப்பகுதியில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ரஜோரியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கன்டி வனப்பகுதியில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்ததில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை ராணுவத்தினர் சுற்றி வளைத்த நிலையில், மோதல் ஏற்பட்டுள்ளது. எனவே வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து ரஜோரி மாவட்டம் முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
scattered missile parts
Indian Army Pulverizes Terrorist Launchpads
Virat Kohli - TEST Cricket
Vikram Misri
Volunteers for INDIAN ARMY
Sofiya Qureshi