#Breaking:கடந்த ஒரே நாளில் 6,563 பேர் கொரோனாவால் பாதிப்பு;132 பேர் இறப்பு!

#Breaking: 6,563 people infected with corona in the last one day; 132 deaths!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,563 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 132ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,47,46,838 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 6,563 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 500 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,47,46,838 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 132 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,77,554 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 8,077 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,41,87,017 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவர்களின் எண்ணிக்கை 82,267 ஆக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை1,37,67,20,359பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 15,82,079 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.