#Breaking:நாடு முழுவதும் கடந்த ஒரே நாளில் 9,216 பேர் கொரோனாவால் பாதிப்பு;391 பேர் இறப்பு!

#Breaking: 9,216 people infected with a corona in the last one day across the country; 391 deaths!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,216 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 391ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,46,06,803 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 9,216 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட  500 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,46,06,803 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 391 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,70,115 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 8,612 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,40,45,666 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 99,976 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 1,25,75,05,514 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 73,67,230 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.