#Breaking:சற்று கவனம்...மீண்டும் மெல்ல அதிகரிக்கும் கொரோனா;ஒரே நாளில் 2,568 பேருக்கு பாதிப்பு!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 2,503 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 2,568 ஆக அதிகரித்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 65 அதிகம்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 2,503 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 2,568 ஆக அதிகரித்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 65 அதிகம் கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,29,96,062 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 27 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 97 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை இந்தியாவில் 5,15,974 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 4,722 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,46,171 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நேற்று 36,168 ஆக இருந்த நிலையில்,தற்போது 33,917ஆக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,80,40,28,891 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 19,64,423தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.