#Breaking:சற்று ஆறுதல்...அதிரடியாக குறைந்த தினசரி கொரோனா;ஆனால்,ஒரே நாளில் 255 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,499 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 255 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,499 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 255 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,29,05,844 ஆக உள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 13,166 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 11,499 ஆக குறைந்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 1600 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,29,05,844 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 302 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 255ஆக குறைந்துள்ளது.இதுவரை இந்தியாவில் 5,13,481 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 23,598 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,22,70,482 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நேற்று1,34,235ஆக இருந்த நிலையில்,தற்போது 1,21,881ஆக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,77,17,68,379 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 28,29,582 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.