#Breaking:கவனம்...மீண்டும் அதிகரித்த கொரோனா;ஒரே நாளில் 1.72 லட்சம் பேருக்கு பாதிப்பு!

#Breaking: Attention...Corona rising again;1.72 lakh people affected in a single day!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்1,72,433 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 1,008 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,18,03,318 ஆக உள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 1,61,386 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 1,72,433 ஆக அதிகரித்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 11,000 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,18,03,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 1,008 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,98,983 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 2,59,107 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,97,70,414 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்  15,33,921 சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 1,67,87,93,137 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 55,10,693 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.