Breaking: சிக்கிமின் நாது லாவில் பனிச்சரிவு; 6பேர் உயிரிழப்பு.!

சிக்கிமில் நாதுலா கணவாய் அருகே பனிச்சரிவில் சிக்கி ஒரு குழந்தை உட்பட 6 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சிக்கிமில் நாதுலா கணவாய் அருகே பனிச்சரிவில் சிக்கி ஒரு குழந்தை உட்பட 6 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சிக்கிம் மாநிலம் நாது லா மலைப்பாதையில் இன்று ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக பல சுற்றுலா பயணிகள் பனியின் கீழ் சிக்கியுள்ளனர். மேலும்  பனிச்சரிவு ஏற்பட்ட போது, அப்பகுதியில் 150க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்த பனிச்சரிவில் சிக்கி இதுவரை ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சிக்கிமில் உள்ள காங்டாக் மற்றும் நாதுலா பாஸுடன் இணைக்கும் ஜவஹர்லால் நேரு (ஜேஎன்) சாலையில் 15வது மைல் தொலைவில் இந்த பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

80 சுற்றுலா பயணிகள் இன்னும் அந்த பனி அடுக்குகளில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் முதலாவதாக மீட்கப்பட்ட 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இவர்களில் நான்கு ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை மேலும் 40 சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.