#BREAKING: மே 4 முதல் CBSE 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – அமைச்சர்

The schedule for the CBSE general board exam has been released by Union Education Minister Ramesh Pokri. Examination from May 4.

சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகளுக்கான தேதியை அறிவித்தார் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது, கொரோனா தாக்கம் சற்று குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் பிரிட்டனில் புதிய வகை கொரோனா பரவி வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனிடையே, சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகளுக்கான தேதி இன்று மாலை 6 மணியளவில் அறிவிக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஓரிரு நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மே 4-ஆம் தேதி முதல் ஜூன் 10-ஆம் தேதி வரை சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். ஜூலை.15க்குள் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

unknown node