இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,447 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 391ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,47,26,049 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 7,447 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 500 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,47,26,049 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 391 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,76,869 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்றில் இருந்து ஒரே நாளில் 7,886 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,41,62,765 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவர்களின் எண்ணிக்கை 86,415 ஆக குறைந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 1,35,99,96,267 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 70,46,805பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.