#Breaking:மீண்டும் 33 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு!

#Breaking: Corona damage past 33,000 again!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33,750 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 123ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,49,22,882 ஆக உள்ளது. மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்வு.

கடந்த 24 மணி நேரத்தில் 33,750 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 6000 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,49,22,882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 123 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,81,893 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 10,846 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,42,95,407 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவர்களின் எண்ணிக்கை 1,45,582ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,45,68,89,306 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 23,30,706 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1700 ஆக உயர்ந்துள்ளது.அதில் 639 பேர் குணமடைந்துள்ளனர்.

unknown node