இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்2,71,202பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 314ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,71,22,164 ஆக உள்ளது.மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை7,743ஆக உயர்வு.
கடந்த 24 மணி நேரத்தில் 2,71,202 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 2000 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை3,71,22,164பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 314ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,86,066 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,38,331பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,50,85,721ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,550,377 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 1,56,76,15,454 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 66,21,395பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
ஒமைக்ரான் பாதிப்பு:
நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இதுவரை 6,041 ஆக இருந்த நிலையில்,தற்போது 7,743 ஆக உயர்ந்துள்ளது.