#Breaking:547 நாட்களுக்கு பிறகு 1 லட்சத்திற்கும் கீழ் சென்ற கொரோனா சிகிச்சை!

#Breaking: Corona treatment that went below 1 lakh after 547 days!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,954  பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 267ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,45,72,523 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 8,954 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட  1900 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,45,87,822 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 267 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,69,247 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 10,207 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,40,28,506 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 99,023 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 1,24,10,86,850 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 80,98,716 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.