#BREAKING: கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் தர பரிந்துரை.!

The Cow Shield Corona vaccine at Oxford University in India is said to have been approved by the Approved Drug Control Board.

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் தர மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரை.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், இந்தாண்டு தொடக்கத்தில் தடுப்பூசி ஒத்திகை செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, ஜனவரி 2ம் தேதி நாளை முதல் தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருந்தது. இந்தியாவை பொறுத்தளவில், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின், சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு, ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி ஆகிய 3 நிறுவனங்கள் தயாரித்துள்ளது.

அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்குமாறு 3 நிறுவனங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, டெல்லியில் இன்று மீண்டும் நிபுணர் குழு ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் தர மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இந்தியாவில் கொரோனா அவசர கால பயன்பாட்டிற்கு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க பரிந்துரை என தகவல் வெளியாகியுள்ளது.