BREAKING: கொரோனாவால் கேரளாவில் முதல் உயிரிழப்பு.!

கொரோனா வைரஸ் உலக நாடுகளை முழுவதும் மிரட்டி வருகிறது.இந்தியாவில் தற்போது இந்த வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது.கொரோனாவால் இந்தியாவில் இதுவரை 873 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 19 பேர் இறந்துள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்.இந்தியாவில் அதிகம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாநிலமாக கேரளாவும் உள்ளது. இந்த மாநிலத்தில் தான் இதுவரை அதிகபட்சமாக 176 பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் கேரளாவில் உள்ள கொச்சி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 69 வயது முதியவர் இறந்துள்ளார். இதனால் கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்த முதல் உயிரிழப்பு . இந்தியாவில் முதல் முதலாக கொரோனா உறுதி செய்யப்பட்டது கேரளாவில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025