இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 4,575 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 4,184 ஆக குறைந்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 350 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,29,80,067 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 145 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 104 ஆக குறைந்துள்ளது.இதுவரை இந்தியாவில் 5,15,459 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 6,554 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,20,120 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நேற்று 46,962 ஆக இருந்த நிலையில்,தற்போது44,488ஆக குறைந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 1,79,53,95,649 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 18,23,329தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.