#BREAKING: நான் எனது முடிவை திரும்பப் பெறுகிறேன் – சரத் பவார் அறிவிப்பு !

என்சிபியின் தேசிய தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததை திரும்ப பெற்றார் சரத் பவார்.

Sharad Pawar

என்சிபியின் தேசிய தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததை திரும்ப பெற்றார் சரத் பவார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஒரு சில நரட்களுக்கு முன்பு சரத் பவார் அறிவித்திருந்தார். அடுத்த ஆண்டு மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தலும், மக்களவைத் தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், சரத் பவாரின் இந்த திடீர் அறிவிப்பால் பரபரப்பான சூழல் ஏற்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த சரத் பவார், தனது முடிவை பரிசீலினை செய்ய வேண்டும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், தனது ராஜினாமா முடிவை திரும்ப பெறுவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சி குழு தனது ராஜினாமாவை ஏற்க மறுத்ததால், அவர்களது முடிவிற்கு கட்டுப்பட வேண்டியது என் கடமை. கட்சியினர் பலர் தனது ராஜினாமாவை வாபஸ் வாங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்ததால், தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெறுவதாக சரத் பவார் விளக்கம் அளித்துள்ளார்.