துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் டெல்லி மேயர் தேர்தலில் வாக்களிக்க முடியாது என உத்தரவு.
டெல்லி மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்களுக்கு வாக்கு இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் டெல்லி மேயர் தேர்தலில் வாக்களிக்க முடியாது என நியமன உறுப்பினர்கள் வாக்களிப்பதற்கு எதிராக ஆம் ஆத்மி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதனிடையே, டெல்லி மாநகராட்சியில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டதால் மாநகராட்சி மேயர் தேர்தல் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.
unknown nodeதுணைநிலை ஆளுநர் பரிந்துரைக்கப்பட்ட 10 கவுன்சிலர்கள் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர், இது ஆம் ஆத்மிக்கு பின்னடைவாக இருந்தது. துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் வாக்களிக்கும் உரிமையை எதிர்த்து ஆம் ஆத்மி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதால் மூன்று முறை சபை தடைபட்டன.
unknown nodeநியமன உறுப்பினர்கள் வாக்களிப்பது தொடர்பாக ஆம் ஆத்மி – பாஜக இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால்ஆம் ஆத்மி கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. இந்த நிலையில், டெல்லி மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்களுக்கு வாக்கு இல்லை என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.