#BREAKING: மீண்டும் தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை.!

The 7th round of talks between the central government and the farmers in Delhi has failed.The next round of talks will take place on Jan 8.

டெல்லியில் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது.

வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலையை சட்ட ரீதியாக உறுதிபடுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. அதன்படி, மத்திய அரசு விவசாயிகளுடன் இன்று 7-ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஸ் கோயல் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், டெல்லியில் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 7-ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 8-ஆம் தேதி நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற முடியாது என பேச்சுவார்த்தையில் மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று விவசாயிகளின் கோரிக்கைகளாக இருந்து வருகிறது.