#BREAKING: மகாராஷ்டிராவில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான்!

The number of people suffering from coronavirus infection from Omicron has increased from 36 to 37 across the country.

நாடு முழுவதும் ஒமிக்ரானால் வகை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36 லிருந்து 37 ஆக உயர்வு.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் முதல் முறையாக நாக்பூரை சேர்ந்த 40 வயது நபருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேற்கு ஆப்ரிக்காவில் இருந்து வந்துள்ளதாக முதற்க்கட்ட தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனால் இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை மகாராஷ்டிராவில் 18, ராஜஸ்தான் 9, டெல்லி 2, குஜராத் 3, ஆந்திரா 1, சண்டிகர் 1, கர்நாடகா 3 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.