#Breaking:மக்களே உஷார்...மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு;ஒரே நாளில் 665 பேர் உயிரிழப்பு!

#Breaking: People, beware ... Corona impact on the rise again; 665 deaths in one day!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்2,85,914  பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 665 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,00,85,116 ஆக உள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 2,55,874 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 2,85,914 ஆக அதிகரித்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 30,000 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,00,85,116 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 665 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,91,127 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 2,99,073 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,73,70,971 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை22,36,842ஆக இருந்த நிலையில்22,23,018ஆக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,63,58,44,536 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 59,50,731 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.