#Breaking:தமிழகத்திற்கு ரூ.1314 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை – மத்திய அரசு விடுவிப்பு!

#Breaking: Rs 1314 crore GST compensation for Tamil Nadu - Central Government release!

ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக தமிழகத்துக்கு ரூ.1314.4277 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக ரூ.17,000 கோடியை விடுவித்துள்ளது.அதன்படி, தமிழகத்துக்கு ரூ.1314.4277 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக, மகாராஷ்டிரா மாநிலத்துக்கு ரூ.3053.5959 கோடியும், கர்நாடகா மாநிலத்துக்கு ரூ.1602.6152 கோடியும் மத்திய அரசு விடுவித்துள்ளது.

மேலும்,குஜராத்துக்கு ரூ.1428.4106 கோடி,கேரளாவுக்கு ரூ.673.8487 கோடி என பிற மாநிலங்களுக்கும் ஜிஎஸ்டி இழப்பீடாக மத்திய அரசு நிதி விடுவித்துள்ளது.

2021-22 ஆம் ஆண்டில்  இதுவரை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு விடுவிக்கப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகை ரூ. 60,000 கோடி ஆகும் என்றும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும்,ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவின்படி, நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதில் ஏற்பட்ட பற்றாக்குறைக்கு பதிலாக ரூ.1.59 லட்சம் கோடி கடன் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.