நாளை முதல் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், ரயில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நாளை முதல் முதற்கட்டமாக மும்பை, பெங்களூரு, சென்னை உட்பட 15 நகரங்களுக்கு ரயில் இயக்கப்படும் என நேற்று மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்தது.
இந்த, சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. முன்பதிவை ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் மட்டுமே செய்யமுடியும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாளை முதல் இயக்கப்படும் ரயில்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
unknown node