#Breaking:அதிர்ச்சி...37 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு!

#Breaking: Shock ... 37 thousand daily corona damage last!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,379 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 124ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,49,60,261 ஆக உள்ளது. மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,892 ஆக உயர்வு.

கடந்த 24 மணி நேரத்தில் 37,379 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 3500 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,49,60,261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 124 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,82,017 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 11,007 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,43,06,414 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவர்களின் எண்ணிக்கை 1,71,830ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை1,46,70,18,464பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 99,27,797 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,892 ஆக உயர்ந்துள்ளது.அதில் 766 பேர் குணமடைந்துள்ளனர்.ஒமைக்ரான் பாதித்தவர்களில் 1,126 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.