#Breaking:சற்று குறைந்த கொரோனா...ஒரே நாளில் 2.42 லட்சம் பேர் குணமடைவு!

#Breaking: Slightly lower corona ... 2.42 lakh people healed in one day!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,37,704 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 488 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,89,03,731 ஆக உள்ளது.மேலும்,நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,050 ஆக உயர்வு.

கடந்த 24 மணி நேரத்தில் 3,37,704 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 10,000 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,89,03,731 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 488 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,88,884 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 2,42,676 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,63,01,482 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை20,18,825ஆக இருந்த நிலையில் 21,13,365ஆகஅதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை1,61,16,60,078பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 67,49,746 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

ஒமைக்ரான் பாதிப்பு:

நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இதுவரை 9,692 ஆக இருந்த நிலையில்,தற்போது 10,050 ஆக உயர்ந்துள்ளது.