#Breaking:ஹேப்பி..சற்று குறைந்த கொரோனா...ஆனால்,கவனம்;22 லட்சத்தை கடந்த சிகிச்சை!

#Breaking: Slightly lower corona ... but, focus; treatment past 22 lakhs!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,06,064  பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 439 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,95,43,328 ஆக உள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 3,33,533 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 3,06,064 ஆக குறைந்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 26,000 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,95,43,328 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 439 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,89,848 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 2,43,495 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,68,04,145 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை21,87,205ஆக இருந்த நிலையில்22,49,335 ஆகஅதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை1,62,26,07,516பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 27,56,364 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

unknown node