#BREAKING: உலக கோடீஸ்வரர் பட்டியல் – 24வது இடத்துக்கு சரிந்தார் அதானி!

உலக பணக்காரர்கள் பட்டியலில் 24-ஆவது இடத்துக்கு சரிந்தார் தொழிலதிபர் கவுதம் அதானி.

உலக பணக்காரர்கள் பட்டியலில் 24-ஆவது இடத்துக்கு சரிந்தார் தொழிலதிபர் கவுதம் அதானி.

அதானியின் சொத்து மதிப்பு வீழ்ச்சி:

unknown node

அமரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியானதை தொடர்ந்து பங்குசந்தையில் அதானி குழும பங்கு விலைகள் சரிந்து வருகின்றன. கடந்த 13 வர்த்தக நாட்களில் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் சரிந்துவிட்டது.  அதன்படி, கடந்த டிசம்பரில் ரூ.12,40,353 கோடியாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு இன்று ரூ.4,33,297 கோடியாக வீழ்ச்சியடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

உலக கோடீஸ்வரர் பட்டியலில் அதானி சரிவு:

unknown node

அதானி சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்ததை அடுத்து உலக கோடீஸ்வர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த கவுதம் அதானி 24வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதானி குழும பங்கு விலைகள் நேற்று ஒரே நாளில் 5 சதவீதம் சரிந்ததால் அவற்றின் சந்தை மதிப்பு ரூ.51,525 வீழ்ச்சி அடைந்தது. அதானி குழும பங்கு விலைகள் இன்றும் 5 சதவீதம் சரிந்ததால் சந்தை மதிப்பு மேலும் ரூ.50,000 கோடிக்கு மேல் வீச்சியடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

உச்சநீதிமன்றத்தில் புதிய மனு:

unknown node

மேலும், ஜனவரி 24-ம் தேதி ரூ.19.2 லட்சம் கோடியாக இருந்த அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு ரூ.9 லட்சம் கோடிக்கு கீழ் சென்றுவிட்டது. இதனிடையே, அதானி குழும நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.