#BreakingNews : அயோத்தி வழக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் தினமும் விசாரிக்கப்படும் -உச்சநீதிமன்றம்

Default Image

அயோத்தி ராமர் கோவில் வழக்கு இறுதி விசாரணை 6ஆம் தேதி தொடங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

அயோத்தியில், 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு முன்பிருந்தே, அங்குள்ள 2.77 ஏக்கர் நிலத்தை உரிமை கொண்டாடுவதில் பிரச்சினை இருந்தது.

அந்த நிலத்தை, ராம் லல்லா, நிர்மோஹி அஹாரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று தரப்பினரும் சரி சமமாக பிரித்துக்கொள்ள, 2010ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கினை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு மாற்றப்பட்டது.அப்போது நடைபெற்ற விசாரணையில் சமரசமான தீர்வு காணவேண்டும் என்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் 3 நபர்கள் கொண்ட சமரசக்குழுவை  அமைத்து உத்தரவு பிறப்பித்தது.

நேற்று  அயோத்தி நில விவகாரம் தொடர்பாக  சமரசக்குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது . மூடிமுத்திரையிட்ட உறையில் நில விவகாரம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தது சமரசக் குழு .மேலும் உச்சநீதிமன்றத்தில் இன்று  இதன் மீது விசாரணை  நடைபெற்றது. 

இந்த நிலையில் இன்று அயோத்தி விவகாரத்தில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண இயலவில்லை அயோத்தி விவகாரம் குறித்து அமைக்கப்பட்ட 3 பேர் குழு உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது. இதன் பின்னர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ,அயோத்தி ராமர் கோவில் வழக்கு இறுதி விசாரணை 6-ஆம் தேதி தொடங்கப்படும் . நாள்தோறும் விசாரணை நடைபெறும் என்றும்  அறிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai