ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு நற்செய்தியை அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
2023 மத்திய பட்ஜெட்டில் மத்திய அரசு அடுத்த 3 ஆண்டுகளில் 38,800 ஆசிரியர்களை நியமிக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஏகலைவா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் (EMRS) 740 பள்ளிகளுக்கு 38,800 ஆசிரியர்கள் மற்றும் துணைப் பணியாளர்களை நியமிக்கப்படுவர் என பட்ஜெட்டில் உரையில் தெரிவித்தார்.
நிதியமைச்சர் கூறுகையில், ஏகலைவா பள்ளிக்கூடம் அதிக அளவில் பிரபலப்படுத்தப்படும். அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஆட்சேர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படும். குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியின குழுக்களின் (பிவிடிஜி) சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்த, பிரதான் மந்திரி பிவிடிஜி மேம்பாட்டு பணி தொடங்கப்படும் என்றும் இது பாதுகாப்பான வீடுகள், சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளுடன் நிறைவு செய்யும் எனவும் கூறினார்.
கல்வி சுகாதாரம், ஊட்டச்சத்து, சாலை மற்றும் தொலைத்தொடர்பு இணைப்பு மற்றும் நிலையான வாழ்வாதார வாய்ப்புகளுக்கான மேம்பட்ட அணுகல் இதுவாகும். பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் இந்த பணியை செயல்படுத்த ரூ.15,000 கோடி கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இதன்பின், அடுத்த 3 ஆண்டுகளில், 3.5 லட்சம் பழங்குடியின மாணவர்களுக்கு சேவை செய்யும் ஏகலைவா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளின் கீழ் உள்ள 740 பள்ளிகளுக்கு 38,800 ஆசிரியர்கள் மற்றும் துணை ஊழியர்களை மத்திய அரசு நியமிக்கும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.