#BUDGET2022: என்னென்ன திட்டங்கள்? எவற்றுக்கெல்லாம் எத்தனை கோடி ஒதுக்கீடு? விவரம் உள்ளே!

Default Image

இளைஞர்கள், பெண்கள், ஏழை, எளிய மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரையுடன் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில், பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தது.

மேலும், அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும்  இளைஞர்கள், பெண்கள், ஏழை, எளிய மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருக்கும் எனவும் மத்திய நிதியமைச்சர் தெரிவித்திருந்தார்.

2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் எவற்றுக்கெல்லாம் எத்தனை கோடி ஒதுக்கீடு:

  • ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு திட்டத்தின் கீழ் 60,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 3.8 கோடி இல்லங்களுக்கு இணைப்பு வழங்கப்படவுள்ளது.
  • பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்திற்கு ரூ.48,000 கோடி ஒதுக்கீடு. வீடில்லாத 18 லட்சம் பேருக்கு 2023 ஆம் ஆண்டுக்குள் வீடுகள் கட்டித்தரப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது.
  • 2030 ஆண்டுக்குள் 280 கிகா வாட் மின்சாரம் சூரிய ஒளி மூலம் தயாரிக்க இலக்கு, 19500 கோடி ரூபாய் சூரிய ஒளி மின்சார தயாரிப்பு பொருள்களை உருவாக்குவதற்காக ஒதுக்கீடு.
  • ரூ.44 ஆயிரம் கோடி மதிப்பில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
  • வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்காக ரூ.2.7 லட்சம் கோடி ஒதுக்கீடு.
  • வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களுக்காக வரும் நிதியாண்டில் ரூ.1500 கோடி ஒதுக்கீடு.
  • அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பொருளாதாரத்தை மேம்படுத்த மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். மாநிலங்களுக்கு உதவ ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • நகர்ப்புற மேம்பாட்டுக்காக ரூ.280 கோடி செலவில் திறன் மேம்பாட்டு மையங்கள் உருவாக்கப்படும்.
  • 5 உயர்கல்வி நிறுவனங்களை தரம் உயர்த்த ரூ.1250 கோடி நிதி ஒதுக்கீடு.
  • அரசின் மூலதன செலவினங்களுக்கு ரூ.7.5 லட்சம் கோடி ஒதுக்கீடு. இது கடந்தை ஆண்டை விட 35.4% அதிகம்.

2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் என்னென்ன திட்டங்கள்:

  • மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சகி இயக்கம், வாத்சல்யா இயக்கம், ஊட்டச்சத்து 2.0 இயக்கம் ஆகிய 3 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிப்பு.
  • மேக் இன் இந்தியா திட்டம் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
  • இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஒலி, ஒளி, வரைகலை சார்ந்த பணிகள் ஊக்குவிக்கப்படும்.
  • 2025க்குள் அனைத்து கிராமங்களிலும் ஃபைபர் ஆப்டிக் மூலம் இணைய வசதி ஏற்படுத்தப்படும். அனைத்து கிராமங்களிலும் பொது மற்றும் தனியார் துறை பங்களிப்பில் இணைய வசதி ஏற்படுத்தப்படும்.
  • நாட்டின் தேசிய நெடுஞ்சாலை வரும் நிதியாண்டில் 25,000 கி.மீ. தொலைவுக்கு புதிதாக அமைக்கப்படவுள்ளது.
  • 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் அடுத்த 3 ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும். 100 சரக்கு முனையங்கள் அமைக்கப்படும்.
  • நதிகள் இணைப்பு தொடர்பான 5 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • நில ஆவணங்களை கணினிமயமாக்கி, ‘ஒரே நாடு – ஒரே பத்திரப்பதிவு’ திட்டம் ஊக்குவிக்கப்படும்.
  • மெட்ரோ ரயில் திட்டங்கள் புதிய வசதிகளுடன் செயல்படுத்தப்படும்.
  • டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் நாடு முழுவதும் உருவாக்கப்படும்.
  • தொலைக்காட்சிகள் மூலமாக கல்வி முறையை செயல்படுத்தும் திட்டத்தின் கீழ் புதிதாக 200 சேனல்கள் உருவாக்கப்படும்.
  • 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு மாநில மொழிகளில் பாடம் நடத்த 200 டிவி சேனல்கள் அறிமுகப்படுத்தப்படும்.
  • தொலைபேசி மூலம் கவுன்சிலிங்க் பெறும் வகையில் தேசிய மனநல சுகாதார திட்டம் தொடங்கப்படும்.
  • நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் வங்கிகளின் 75 டிஜிட்டல் வங்கி யூனிட்கள் நிறுவப்படும்.
  • மின்னணு பாஸ்போர்ட் வரும் நிதியாண்டிலிருந்து வழங்கப்பட உள்ளது.
  • 5ஜி மொபைல் சேவைகள் வரும் நிதியாண்டில் கொண்டுவரப்படும்.
  • பணம் செலுத்துவதில் ஏற்படும் தாமதத்தைக் குறைக்க அனைத்து அமைச்சகங்களும் பயன்படுத்தும் வகையில் ஆன்லைன் பணம் செலுத்தும் திட்டம் தொடங்கப்படும்.
  • ரிசர்வ் வங்கி மூலம் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும். டிஜிட்டல் கரன்சி மூலம் இனைய பரிவர்த்தனை ஊக்குவிக்கப்படும்.
  • மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசு பணியாளர்களுக்கும் TDS சலுகை.
  • சிறுகுறு தொழில்களுக்கான அவசர கடன் உறுதி திட்டம் மார்ச் 2023ம் ஆண்டு வரை நீட்டிப்பு.
  • நகர திட்டமிடலுக்கு உயர்மட்டக்குழு அமைக்கப்படும்.
  • மின்சார வாகனங்களுக்காக ஊரகப்பகுதிகளில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்.எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகளை மாற்றிக் கொள்ளும் வசதி கொண்டுவரப்படும்.
  • நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் வங்கிகளின் 75 டிஜிட்டல் வங்கி யூனிட்கள் நிறுவப்படும்.
  • நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும்.
  • One station, One product திட்டம் உள்ளூர் வணிகத்திற்கு உதவியாக இருக்கும், பொருட்கள் விநியோக பாதையை மேம்படுத்தும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05052025
Kahmir person jumped into river and died
DMK MP A Rasa stage collapse
NEET exam 2025
India Pakistan - Postal Services