மகாராஷ்டிராவில் கட்டிட விபத்து – ராகுல் காந்தி இரங்கல்

மகாராஷ்டிராவில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்கட் மாவட்டத்தில் உள்ள காஜல்புராவில் 5 மாடி கட்டிடம்  நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து இருந்த மக்கள் சிக்கினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வந்த தேசிய மீட்பு படையினர் மற்றும் மாநில மீட்பு படையினர், தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  தற்போது வரை 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், 7 பேர் உயிரிழந்ததாகவும் ,மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்மகாராஷ்டிராவில் கட்டிடம்  இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.காயமடைந்த மற்றும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களுக்கு மாநில அரசு விரைவாக உதவ வேண்டும். மீட்புப் பணிகளில் காங்கிரசாரும் உதவுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.