முசோரியில் இருந்து டேராடூனுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து, பள்ளத்தாக்கில் விழுந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 38 பேர் காயமடைந்துள்ளனர்.
முசோரியில் இருந்து புறப்பட்டு டேராடூனுக்கு சென்று கொண்டிருந்த உத்தரகாண்ட் ரோட்வேஸ் பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் மற்றும் அவரது மகள் உயிரிழந்துள்ளனர் மேலும் 38 பேர் காயமடைந்தனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, போலீசார், தீயணைப்பு படையினர், ஆம்புலன்ஸ் ஆகியோர் சம்பவ இடத்தில் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 26 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும், அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இந்த விபத்து குறித்து கூறிய போலீசார், பேருந்தின் பிரேக் செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
unknown node