வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கவில்லை!

வயநாடு தொகுதி இடைத்தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அறிவிக்கவில்லை.

வயநாடு தொகுதி இடைத்தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அறிவிக்கவில்லை.

கேரளா வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி இன்று காலை 11.30 மணிக்கு அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகியிருந்தது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் வயநாடு நாடாளுமன்ற தொகுதி காலி என அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்துள்ள நிலையில், அதற்கான தேதியை இன்று அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

வயநாடு இடைத்தேர்தல்:

இந்த சமயத்தில், டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், 224 தொகுதிகளை கொண்ட கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் மே 10-ஆம் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 13-ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்பால் காலியாக உள்ள வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் குறித்த தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவிக்கவில்லை.

4 மாநில இடைதேர்தல்:

இதைத்தவிர பஞ்சாபில் உள்ள ஜலந்தர் மற்றும் ஜார்சுகுடா நாடாளுமன்றத் தொகுதி, ஒடிசாவில் சான்பே மற்றும் சுவார் தொகுதி, உ.பியில் சோஹியோங், மேகாலயா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மே 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் மே 13 அன்று முடிவு அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கவில்லை. பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் கடந்த 23ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

எம்.பி பதவி பறிப்பு:

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை முதல் நாள் அறிவிக்கப்படுகிறது. இரண்டாவது நாள் அவருடைய எம்.பி பதவி பறிக்கப்படுகிறது. மூன்றாவது கேராளாவின் வயநாடு தொகுதி காலி என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த சமயத்தில் இன்று இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அறிவிக்கவில்லை. ராகுல் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டால், அவரது வயநாடு தொகுதி இடைத்தேர்தலில், சகோதரி பிரியங்கா காந்தியை நிறுத்த, கேரள மாநில காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.