அன்புஜோதி ஆசிரம சர்ச்சை :
விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் ஆதரவற்றோர் துன்புறுத்தப்பட்டது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளரிடம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
2023-02-22 05:47 PM
கார்ல் மார்க்ஸ் குறித்து விஷமத்தனமாக பேச்சு :
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘கார்ல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது’ என பேசியிருப்பது அவரது அறியாமையின் உச்சத்தை காட்டுகிறது. தாய்மொழி, சமூகம், மாநிலங்களில் நிலவி வரும் தனித்துவம் வாய்ந்த சமூக உறவுகள் குறித்து அடிப்படை புரிதல் இல்லாதவர் தமிழ்நாட்டின் ஆளுநராக வந்திருப்பது வரலாற்றுத் துயரமாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
2023-02-22 05:35 PM
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் :
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையர் அஜய் பாது தலைமையில் காணொளி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
#BREAKING: இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம் ஆலோசனை தொடங்கியது!
2023-02-22 05:21 PM
அசத்தும் பாஸ்போட் மனிதர்
பிரிட்டனைச் சேர்ந்த லேன் என்பவர் பாஸ்போட்டில் பதிக்கப்படும் சீல்-ஐ தனது கை, கால்களில் பச்சை குத்திக்கொண்டுள்ளார். பல நாடுகளில் நடைபெற்ற கால்பந்து போட்டிகளை காணச் சென்றதன் நினைவாகவும், மீண்டும் அந்நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையுமா என தெரியாது என்பதாலும் இவ்வாறு பச்சை குத்திக்கொண்டதாக தெரிவித்துள்ளார். இதுவரை 32 நாடுகளின் சீல்-களை பச்சை குத்திக்கொண்ட இவர், இன்னும் பல நாடுகளுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார்.
unknown node[Image Source : Twitter]
2023-02-22 03:30 PM
புதுடெல்லியில் நில அதிர்வு:
இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் நகரில் உள்ள கட்டிடங்கள் சிறிது நடுக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்த அதிர்வினால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். முன்னதாக உத்தரகாண்ட் மாநிலத்தில் எந்த நேரத்திலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று என்ஜிஆர்ஐ தலைமை விஞ்ஞானி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
2023-02-22 02:15 PM
பங்குச்சந்தை சரிவு :
மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 533 புள்ளிகள் அல்லது 0.88% என குறைந்து 60,138 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது. தற்பொழுது கடும் சரிவை சந்தித்த சென்செக்ஸ் 727 புள்ளிகள் குறைந்து 59,945 ஆக வர்த்தகம் செய்யப்படுகிறது. தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 199.30 புள்ளிகள் அல்லது 1.12% குறைந்து 17,627 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
2023-02-22 01:10 PM
எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் தீ விபத்து
சென்னை ராயப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் உள்ள உணவு விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
2023-02-22 12:20 PM
டெண்டர் முறைகேடு வழக்கு:
அதிமுக ஆட்சியில் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது டெண்டர்கள் வழங்கியதில் ரூ.800 கோடி முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. தற்பொழுது உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
2023-02-22 11:54 AM
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் மருத்துவ சேவைகளை பெற, அரசு மருத்துவமனையை நோக்கி மட்டுமே வர வேண்டும் என்பதே என் இலக்கு என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தற்பொழுது எனது இலக்கில் 50% எட்டியுள்ளதாக நம்புகிறேன் என்று மேலும் கூறினார்.
2023-02-22 11:31 AM
நிலநடுக்கம் :
இந்தியாவின் டெக்கட்டானிக் தட்டுகள் ஒவ்வொரு ஆண்டும் 5 செ.மீ நகர்கிறது. இது நிலநடுக்கங்களின் சாத்தியத்தை அதிகரிக்கிறது என்று என்ஜிஆர்ஐ தலைமை விஞ்ஞானி கூறினார்.
2023-02-22 10:52 AM
அனுமதியின்றி மெழுகுவர்த்தி ஊர்வலம் :
முறையான அனுமதியின்றி மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்தியதற்காக அண்ணாமலை உட்பட 3,500 பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது சென்னை காவல்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Readmore :#JustNow : அண்ணாமலை உட்பட 3500 பேர் மீது வழக்குப்பதிவு..!
2023-02-22 10:22 AM