சிஏபிஎஃப் பணிகளுக்கான தேர்வு 13 மாநில மொழிகளில் நடத்துவதற்கு வந்த அறிவிப்பை, பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.
அறிவிப்பு:
மத்திய ஆயுதப்படையான சிஏபிஎஃப் பணிகளுக்கான தேர்வு, இதுவரை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது 13 பிராந்திய மொழிகளில் இந்த தேர்வுகளை எழுதலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துளளது.
13 மொழிகளில் தேர்வு:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட அறிவிப்பில், ஆங்கிலம், இந்தி உட்பட, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் இளைஞர்கள் துணை ராணுவப்படையில் இடம்பெறுவதற்கும், பிராந்திய மொழிகளை ஊக்குவிக்கவும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல்வர் வரவேற்பு:
முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அந்தந்த மாநில மொழிகளில் தேர்வுகளை நடத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை அடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்த தேர்வு வரும் ஜனவரி 1, 2024 இல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
இளைஞர்களின் கனவு:
இந்த நிலையில் பிரதமர் மோடி, இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த அறிவிப்பால், இளைஞர்களின் கனவு நிறைவேறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இளைஞர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்ற மொழி ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
unknown node