கேப்டன் வருண் சிங் உடல்நிலை சீராக உள்ளது – விமானப்படை

Group captain Varun Singh, who was injured in a Coonoor army helicopter crash, remains in critical condition.

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த குரூப் கேப்டன் வருண் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.

கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் குரூப் கேப்டன் வருண் சிங் 80% தீக் காயத்துடன் மீட்கப்பட்டு, பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயத்துடன் மீட்கப்பட்டு, பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குரூப் கேப்டன் வருண் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தாலும், உடல்நிலை சீராக உள்ளது என்று இந்திய விமானப்படை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.